மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தல்

by admin

மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தல் on Friday, December 06, 2024

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஓர் அங்கமாகிய இந்து சமயம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் எதிர்கால திட்டங்களை முன்னேற்றுவதற்கும், மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் நோக்குடன், அவ் அமைச்சின் கௌரவ அமைச்சர் பேராசிரியர் ஹினிதும் சுனில் செனவி மற்றும் பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் வெள்ளவத்தை அருள்மிகு ஸ்ரீ மயூராபதி பத்திரகாளியம்மன் கோவிலுக்கு சென்றிருந்தனர்.

இந்த நேரத்தில், ஆலய அறங்காவலர் சபையின் தலைவர் திரு பி. சுந்தரலிங்கம் உட்பட அங்கத்தினர்களால் விசேட பூஜை வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், அமைச்சர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், இந்து சமயம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு ய. அநிருத்னன் கலந்து கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்