மட்டக்களப்பில் ஹரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் 17 வயது சிறுவன் கைது

by admin

on Friday, December 06, 2024

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள காந்தி கிராமத்தில்  வீடு ஒன்றை முற்றுகையிட்ட விசேட அதிரடிப்படையினர், பெருமளவிலான ஹரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் 17 வயது சிறுவன் ஒருவரை இன்று வெள்ளிக்கிழமை (06) கைது செய்து ஒப்படைத்துள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர். 

கல்லடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த முகாம் பொறுப்பதிகாரியின் தலைமையில், சம்பவதினமான இன்று பகல் வீடு ஒன்றை முற்றுகையிட்டு சோதனை மேற்கொண்டபோது  10 கிராம் 950 மில்லிக்கிராம் ஹரோயின் போதை மற்றும் 650 மில்லிக்கிராம் கொண்ட 5 பக்கற் கேரளா (7 கிராம் 200 மில்லிக்கிராம்) கஞ்சாவை மீட்டதுடன் 17 வயது சிறுவனை கைது செய்தனார்.

கைது செய்யப்பட்ட சிறுவனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்

தொடர்புடைய செய்திகள்