பெண்ணொருவர் சு ட் டு க் கொ லை !

by adminDev

பெண்ணொருவர் சு ட் டு க் கொ லை ! on Friday, December 06, 2024

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் வீடொன்றில் இருந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (05) இரவு பதவிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகஹவெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண், பதவிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பாலயாவெவ, போகஹவெவ பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டுக்காக டி56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் அல்லது சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

பதவிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளர்.

தொடர்புடைய செய்திகள்