17
பிணையில் நேற்று வெளியே வந்த லொஹான் – இன்று மீண்டும் கைது
பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்து ஒன்று தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சட்டவிரோதமான முறையில் வாகனம் ஒன்றினை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இவரும் , இவரின் மனைவியும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் இருவரையும் நீதிமன்று பிணையில் விடுவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.