டிப்போ காவலாளியை கொ லை செய்து 9 இலட்சம் பணம் கொள்ளை !

by adminDev

on Friday, December 06, 2024

நுவரெலியா, டிப்போவில் பணிபுரிந்த காவலாளி ஒருவரைக் கொன்று, டிப்போவில் இருந்த 9 இலட்சம் ரூபா பணத்தை சிலர் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

டிப்போவில் காவலராகப் பணியாற்றிய நுவரெலியா கல்பாய பிரதேசத்தைச் சேர்ந்த 85 வயதான கே.லோகேஸ்வரன் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சிலர் காவலரை கொன்றுவிட்டு டிப்போவின் அலமாரியில் இருந்த சுமார் 9 லட்சம் ரூபாயை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காவலர் தனது பாதுகாப்பு அறையில் தங்கியிருந்ததாகவும், அப்போது சிலர் கூரிய ஆயுதத்தால் தலையில் தாக்கி கொன்று பணத்தை கொள்ளையிட்டுச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது.

கொலைச் சம்பவத்தின் போது டிப்போவிற்குப் பொறுப்பான அதிகாரியும் காசாளரும் டிப்போவில் தங்கியிருந்த போதிலும் அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா டிப்போவில் நேற்று (05) ஓடிய பேருந்துகளின் வருமானம், வங்கிப் பணிகளுக்காக அலமாரியில் வைக்கப்பட்டிருந்ததாக நுவரெலியா டிப்போவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்