12
சட்டவிரோதமாக புதையல் தோண்டிய நால்வர் கைது ! on Friday, December 06, 2024
மொனராகலை, எத்திமலை பிரதேசத்தில் சட்டவிரோதமாக புதையல் தோண்டியதாக கூறப்படும் 04 சந்தேக நபர்கள் நேற்று வியாழக்கிழமை (05) கைது செய்யப்பட்டுள்ளதாக எத்திமலை பொலிஸார் தெரிவித்தனர்.
எத்திமலை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கண்டி, மொனராகலை மற்றும் குருணாகல் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 28, 29, 53 மற்றும் 61 வயதுடையவர்கள் ஆவர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எத்திமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.