இணையத்தளம் மூலம் பண மோசடி !

by wp_shnn

இணையத்தளம் மூலம் பண மோசடி ! on Friday, December 06, 2024

இணையத்தளம் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரை வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (05) வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திகன பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவர் ஆவார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவது ,

சந்தேக நபர் சமூக வலைத்தளங்கள் ஊடாக அறிமுகமான நபரொருவரிடம் இணையத்தில் பணம் சம்பாதிக்கலாம் என கூறி 05 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்