அமைச்சரவை தீர்மானத்தை புறம்தள்ளி யாழில். நிலைகொண்டுள்ள இராணுவம்

by wp_shnn

அமைச்சரவை தீர்மானத்தினை புறம்தள்ளி யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர். 

பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் தனியாரின் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இருந்து இராணுவத்தினர் வெளியேறி , காணியை உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு , இராணுவ தலைமையகம் அறிவித்திருந்தது. 

கடந்த மாதம் 18ஆம் திகதி அமைச்சரவையில் குறித்த காணியில் இருந்து இராணுவத்தினர் வெளியேறி, உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது என , தீர்மானிக்கப்பட்டு அது தொடர்பில் , இராணுவ தலைமையகத்திற்கு அறிவிக்கப்பட்டதை , அடுத்து எதிர்வரும் 14 நாட்களுக்குள் இராணுவத்தினர் காணியை விட்டு வெளியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டது. 

தற்போது 14 நாட்கள் கடந்துள்ள நிலையிலும் , இராணுவத்தினர் அப்பகுதியில் இருந்து வெளியேறுவதற்கான முயற்சிகள் எதனையும் முன்னெடுக்க வில்லை என ஊரவர்கள் தெரிவிக்கின்றனர். 

குறித்த காணிகளை இராணுவத்தினர் சுவீகரிக்கும் நோக்குடன் கடந்த காலங்களில் பல தடவைகள் காணி அளவீட்டு பணிகளை முன்னெடுக்க முயன்றனர். அதன் போது தமிழ் தேசிய கட்சிகளின் அரசியல்வாதிகள் , காணி உரிமையாளர்கள் ஊரவர்கள் ஒன்றிணைந்து காணி அளவீட்டு பணிகளுக்கு எதிராக போராட்டங்களை நடாத்தி அவற்றை தடுத்து நிறுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்