21
நுவரெலியா, டிப்போ காவலாளியை படுகொலை செய்து, டிப்போவில் இருந்த 9 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
டிப்போவில் காவலராகப் பணியாற்றிய நுவரெலியா கல்பாய பிரதேசத்தைச் சேர்ந்த கே.லோகேஸ்வரன் வயது 85 ) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
காவலர் தனது பாதுகாப்பு அறையில் தங்கியிருந்த வேளை கூரிய ஆயுதத்தால் தலையில் தாக்கி கொலை செய்த பின்னர் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய தினம் வியாழக்கிழமை ஓடிய பேருந்துக்களின் வருமானம் டிப்போவில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையிலையே இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்