14
அரிசி, தேங்காய் கொள்வனவில் கட்டுப்பாடு – சதொச அறிவிப்பு ! on Friday, December 06, 2024
வெளி மாகாணங்களில் உள்ள லங்கா சதொச விற்பனை நிலைங்களில் இன்று வெள்ளிக்கிழமை (6) முதல் நுகர்வோருக்கு நாட்டு அரிசி மற்றும் தேங்காய்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக லங்கா சதொசவின் தலைவர் டொக்டர் சமித்த பெரேரா தெரிவித்தார்.
அதன்படி, நுகர்வோர் ஒருவர், ஒரு கிலோ 220 ரூபா வீதம் ஐந்து கிலோ அரிசியையும், ஒரு தேங்காய் 130 ரூபா வீதம் மூன்று தேங்காய்களையும் ஒரே நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
அரிசி மற்றும் தேங்காய்களை சதொச ஊடாக நுகர்வோருக்கு விற்பனை செய்யும் நடவடிக்கை நேற்று வியாழக்கிழமை (5) கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டதாக லங்கா சதொசவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.