IMF உடன்படிக்கை திருத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவிப்பு !

by guasw2

on Thursday, December 05, 2024

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையில் திருத்தப்பட்ட விடயங்கள் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தெரியவரும் என சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் கொள்கை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“அடுத்த மூன்று ஆண்டுகளில் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பிற்குள் நாங்கள் செயல்பட வேண்டும் என்று நாங்கள் கூறினோம்.

அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கிறோம். ஆம், அது திருத்தப்பட்டுள்ளது. அவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அந்தத் திருத்தங்களின் விடயங்களை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நாட்டு மக்கள் அறிந்து கொள்ள முடியும்.

பாராளுமன்றத்திற்கே நிதி அதிகாரம் உள்ளது. அனுபவமிக்க ரணில் விக்கிரமசிங்க எல்லா இடங்களிலும் VAT குறைக்கப்படவில்லை என்று பொய் சொன்னோம் என்றார். VAT குறைக்கப்பட வேண்டும்.

VAT குறைக்கப்படவுள்ளது. யாரால் குறைக்க முடியும்? இது ஒரு நிதி சட்டமூலம்.

அவரும் நமது பிரதமருக்கு டியூஷன் கொடுக்க முயன்றார். பாராளுமன்ற சட்டத்தின் மூலம் மட்டுமே வரிகளை குறைக்க முடியும். முதல் திட்டம் வரவு செலவுத்திட்டத்தில் செயல்படுத்தப்படும்” என்றார்.

தொடர்புடைய செய்திகள்