16
மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பில் அமைச்சர் விளக்கம் ! on Thursday, December 05, 2024
வடக்கில் நடைபெற்ற 244 மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளில் 10 இடங்களில் விடுதலைப் புலிகளின் சின்னங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த நவம்பர் மாதம் 21 முதல் 27 ஆம் திகதி வரையான மாவீரர் நாள் வாரத்தில் வடக்கில் 244 நினைவேந்தல்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவற்றில் 10 இல் மட்டும் விடுதலைப் புலிகளின் சில சின்னங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பொலிசார் இது தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.” என்றார்.