கிளிநொச்சியின் நாதன் திட்டம் பகுதியில் குடும்பப்பெண் ஒருவர் இன்று பரிதாபகரமாக மரணித்துள்ளார்.இதனிடையே உயிரிழந்தவரின் 14வதுடைய சிறுவன் அதித மது போதையில் இருந்துள்ளதாகவும் அவனை காவல்துறை கைது செய்து அழைத்து சென்றிருப்பதாக கூறப்படுகின்றது.
இதனிடையே தமிழ் மக்கள் எதிர்பார்த்தது மதுபானசாலைகளின் பெயர்களையும், அதன் எண்ணிக்கையையும் அல்ல.மதுபானசாலைகள் அனைத்தும் ரனில் விக்கிரமசிங்க அவர்களினால் கடந்த ஐனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவளிப்பதற்காக அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்டவை. மதுபானசாலை அனுமதி பத்திரங்களை பெற்றுக்கொண்ட அரசியல்வாதிகள் அதனை பல கோடிகளுக்கு விற்றுவிட்டார்கள்.
இங்கே அரசு வெளியிட்டுள்ள பெயர் பட்டியலில் உள்ள பெயர்கள் அனைத்தும் அரசியல்வாதிகளின் சிபார்சில் அவர்களிடம் இருந்து பெற்றவர்களின் பெயர்களே.
கிளிநொச்சியில் உள்ள 16 மதுபானசாலைகளும் யாரோ ஒரு அரசியல் வாதியினால் விற்கப்பட்டவையே. எனவே அரசு விற்றவர்களின் பெயர்களையே வெளியிட வேண்டுமே தவிர வாங்கியவர்களின் பெயர்களை அல்லவென குரல்கள் எழுந்துள்ளது.