காணாமல் போனோரை கண்டறிய அனுரவால் முடியாதாம்!

by adminDev2

காணாமல்போனோர் விடயத்தில் உடனடியாக எதுவும் செய்ய இயலாது. படிப்படியாக விடயத்துக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சமஸ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு குறித்து புதிய அரசமைப்பு உருவாக்கத்தின்போதே கவனத்தில்கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றுப் புதன்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

“இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசினோம். சுமஸ்டி அடிப்படையிலான தீர்வு தொடர்பில் புதிய அரசமைப்பு உருவாக்கத்தின்போதே கவனத்தில்கொள்ள முடியும் என அவர் எம்மிடம் குறிப்பிட்டார்.

மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருட இறுதிக்குள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எம்மிடம் உறுதியளித்தார்.அரசமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் அவர் எம்மிடம் எதுவும் கூறவில்லைடியன சிறீதரன் தெரிவித்துள்ளார்..

இதனிடையே ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்பொழுது மாகாணசபை முறைமைகள் பாதுகாக்கப்படும் என்று கூறிய அநுரஇன்று அவற்றை நிகாரிக்கின்ற போக்கைக் கொண்டிருப்பதாக  சுரேஸ் க. பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏழு வருடங்களாக மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெறவில்லை. இதன் காரணமாக மாகாணசபைக்கு உரித்தான அனைத்து அதிகாரங்களும் கொழும்பிலிருக்கின்ற அரசாங்கத்தாலேயே கையாளப்படுகின்றது.

இப்பொழுது வந்திருக்கின்ற அரசாங்கமும்கூட மாகாணசபை தேர்தல்களை விரைந்து நடாத்துவதற்கான எவ்வித ஆயத்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் 2025ஆம் வருட இறுதியிலோ அல்லது அதற்குப் பின்னராகவோ மாகாணசபைத் தேர்தல்களை நடத்தலாம் என்று கூறுகிறதெனவும் சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்