19
யுனைடெட் ஹெல்த்கேர் (UHC) காப்புறுதி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தொம்சன் (வயது 50) இன்று புதன்கிழமை நியூயார்க் நகரில் உள்ள ஒரு ஹோட்டலுக்குவெளியே சுட்டுக் கொல்லப்பட்டார். அங்கு அவர் காலை முதலீட்டாளர் கூட்டத்தில் உரையாற்றத் திட்டமிட்டடார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
பிரையன் தாம்சன் மிட்டவுன் மன்ஹாட்டனில் உள்ள ஹில்டன் ஹோட்டலுக்கு வெளியே காலை 7 மணிக்கு (1200 UTC) இருந்தபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கறுப்பு நிறத்தில் முகமூடி அணிந்திருந்ததார். குறித்த தாக்குதலாளி துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அவர் துப்பாக்கியில் சைலன்சரைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஆரம்பகட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற பகுதி சுற்றிவளைக்கப்பட்டது.