அரிசியை இறக்குமதி செய்யாவிடின் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு ! on Wednesday, December 04, 2024
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கான நீண்டகால வேலைத்திட்டத்தை தயாரிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என சங்கத்தின் தலைவர் யு.கே.சேமசிங்க குறிப்பிட்டார்.
பீயர், கால்நடை தீவன உற்பத்திக்கான அரிசி விநியோகத்தை ஒழுங்குபடுத்துவது மிகவும் முக்கியமானது என்றும் வலியுறுத்தினார்.
இதனிடையே, வெள்ளத்தால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்குப் பதிலாக மீண்டும் நடவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் வேளாண்மைப் பணிப்பாளர் கே. பி. குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.