அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை நடைமுறைப்படுத்த கோரிக்கை!

by 9vbzz1

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக வாக்களித்த அநுர அரசாங்கம் அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி (Azath Saali) தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டுள்ளார்.

இதனைக் கொண்டு அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை அநுர அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று அசாத் சாலி கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன், பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்குவதோடு, உரப்பற்றாக்குறைக்கும் அரசாங்கம் தீர்வு வழங்க வேண்டும்.

இதேவேளை, கடந்த தேர்தல்கள் காலத்தில் மக்கள் மத்தியில் முன்வைத்த அனைத்து விடயங்களையும் நடைமுறைப்படுத்த ஆரம்பித்தால் தான் இந்த அரசாங்கம் வலுப்பெறும்.

இல்லையேல் இந்த அரசாங்கம் வீழ்ச்சியடைவதை யாராலும் தடுக்க முடியாது. தாங்கள் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் இந்த அரசாங்கத்திற்கு உண்டு எனவும் அசாத் சாலி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்