தேங்காய் 130 ரூபாவுக்கு விற்பனை !

by adminDev

on Wednesday, December 04, 2024

நாட்டில் நிலவும் தேங்காய் விலை நெருக்கடிக்கு தீர்வாக அடுத்த 2 வாரங்களுக்குள் 10 இலட்சம் தேங்காய்களை புறநகர் பகுதிகளுக்கு விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, சதொச ஊடாக ஒரு தேங்காய் 130 ரூபாவிற்கு வழங்கவுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு சொந்தமான தோட்டங்களில் உள்ள தென்னை உற்பத்திகளால் கிடைக்கும் தேங்காய்களே இவ்வாறு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாளாந்தம் 200,000 கிலோகிராம் அரிசியை சதொச ஊடாக சந்தைக்கு இன்று முதல் கட்டுப்பாட்டு விலையில் வழங்க அரிசி ஆலை உரிமையாளர்கள் இணக்கம் வௌியிட்டதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்