12
தங்க முலாம் பூசப்பட்ட புத்தர் சிலையுடன் இளைஞன் ஒருவன் கைது ! on Wednesday, December 04, 2024
காலி, இரத்கம பிரதேசத்தில் தங்க முலாம் பூசப்பட்ட புத்தர் சிலையுடன் இளைஞன் ஒருவன் இரத்கம பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (03) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
இரத்கம பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் காலி பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய இளைஞன் ஆவார்.
41 கிராம் 19 மில்லி கிராம் தங்க முலாம் பூசப்பட்ட இந்த புத்தர் சிலையானது புதையல் தோண்டியதன் மூலம் கிடைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேக நபர் இந்த புத்தர் சிலையை விற்பனை செய்வதற்குத் தயாராக இருந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.