நாமல் கப்பம் வாங்கவில்லையாம்!

by adminDev

யாழ்ப்பாணத்தில் நாமல் ராஜபக்சவின் பெயரை பயன்படுத்தி நிதி மோசடிகள் இடம் பெற்று வருவதாக பொதுஜன பெரமுனவின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கீதநாத்  காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இறுதி யுத்த காலப்பகுதியில் காணாமல் போனவர்களையும் கைதானவர்களையும் மீ;ட்டுதருவதாக நாமல் தரப்பு தமிழ் குடும்பங்களிடையே கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டியிருந்தது.  

“கடந்த காலங்களில் நாமல் பஸில் ராஜபக்சவின் பெயரை பயன்படுத்தி காணி பிடிப்பது கட்டப் பஞ்சாயத்து செய்வது போன்ற செயற்பாடுகளில் சிலர் ஈடுபட்டு வந்தனர் என்ற குற்றச்சாட்டு காணப்படுகின்றது.

எமது கட்சியின் பெயரை பயன்படுத்தி இப்படியான மோசடிகள் செய்பவர்கள் தொடர்பாக மக்கள் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய வேண்டும்.

கடந்த காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் தான் எமது கட்சியின் தோல்விக்கு காரணமாக அமைந்திருக்கின்றது என நான் நினைக்கின்றேன்.

அந்த மாதிரியான குற்றச்சாட்டுகளை களைய வேண்டியது எனது கடமையாக இருக்கின்றது.நாமல் ராஜபக்ச வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றார், நாமல் ராஜபக்ச தங்கம் வியாபாரம் செய்கின்றார் போன்ற பொய்யான தகவல்களை சிலர் பரப்பி மோசடிகளை செய்து வருகின்றனர்.

எமது கட்சியின் பெயரை பயன்படுத்தி குற்றச் செயல்களை செய்கின்றவர்களை கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கான அதிகாரம் எனக்கு வழங்கப்பட்டுள்ளதெனவும் கீத்நாத் தெரிவித்துள்ளார்..

தொடர்புடைய செய்திகள்