17
பல பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் ! on Tuesday, December 03, 2024
பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உட்பட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இ.எம்.எம்.எஸ். தெஹிதெனிய நுகேகொட பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.டபிள்யூ.ஐ.எஸ். முத்துமால குற்றப் புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.