20
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை மீளப்பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்
ஆதீரா Tuesday, December 03, 2024 இலங்கை
2023 ஆம் ஆண்டு பொறுப்பேற்கப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை மீளப்பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்கள் அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார்.
அதேபோல், புதிய வேட்புமனுக்களை கோருவதற்கு அனுமதிக்கும் வகையில் உள்ளூராட்சி சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்