23 தமிழக கடற்தொழிலாளர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

by adminDev2

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 23 தமிழக கடற்தொழிலாளர்களுக்கும் 06 வருடங்களுக்கு ஒத்தவைத்த 2 வருட சிறைத்தண்டனை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 10ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பினுள் மூன்று படகுகளில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 23 கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். 

மறுநாள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட , நிலையில் அவர்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்க நீதவான் உத்தரவிட்டிருந்தார். 

இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மன்றில் எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் 23 கடற்தொழிலாளர்களுக்கும் 02 வருட சிறைத்தண்டனை விதித்த மன்று , அதனை 06 மாதங்களுக்கு ஒத்திவைத்துள்ளது. 

அதேவேளை , குறித்த 23 பேரில் 03 படகோட்டிகள் ஆவார்கள். மூன்று படகோட்டிகளுக்கும் மேலதிகமாக 06 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் , 4 மில்லியன் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை கட்ட தவறின் 03 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என மன்று தீர்ப்பளித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்