by adminDev

on Tuesday, December 03, 2024

(சித்தா)

கொழும்பு அலரி மாளிகையில் 01.12.2024 இல் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான சிறுவர் நாடக விழாவில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரிக்கு தேசிய ரீதியில் பல்வேறு விருதுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவ் விருதுகள் ‘சாதுரிய காக்கையார்’ என்ற சிறுவர் நாடகத்திற்கே கிடைத்துள்ளன. இந்த வகையில் இவ் வருடத்திற்கான சிறந்த பிரதியாக்கத்திற்கான முதலாமிட விருதினை ‘சாதுரிய காக்கையார்’ நாடகத்திற்காகப் பாடசாலையின் பிரதி அதிபர் திருமதி.சுகன்யா ரவீந்திரகுமாருக்கும், பாடசாலை ஆசிரியர் சிவகுரு நந்தகுமாருக்கு சிறந்த தயாரிப்பாளருக்கான இரண்டாமிட விருதும், சிறந்த ஒப்பனைக்கான முதலாமிட விருதினை ஆசிரியர் தர்சினி வித்தகராஜ்க்கும் கிடைக்கப்பெற்றது.

மேலும் பாடசாலை மாணவன் றொய்ஸ்டன் செலர்க்கு ‘சாதுரிய காக்கையார்’ என்ற சிறுவர் நாடகத்தின் சிறந்த இசையமைப்புக்கான விருதும், மாணவன் அற்புதத்துரை தர்மிதனுக்கு சிறந்த அரங்க முகாமைத்துவ விருதும், சிறந்த நடிகைக்கான முதலாமிட விருது மாணவி செந்தூரன் ஸ்ருதிக்கும், சிறந்த நடிகைக்கான இரண்டாமிட விருது மாணவி தயாபரன் சப்தனாவுக்கும் கிடைக்கப்பெற்றது. சிறந்த நடிகருக்கான விருதுகளில் மாணவன் அன்புராசா கிஷாளனுக்கு மூன்றாமிட விருதும், சிறுவர் நாடகத்தின் நடிகைகளுக்கான திறமைச் சான்றிதழ் விருதுகளை மாணவிகளான அருநேஷன் கேஷ்னா, ரகுராமன் யுபாஷனாவுக்கும் கிடைக்கப்பெற்றது. அத்துடன் மாணவி நந்தகுமார் ஷேத்தரண்யாவுக்குத் திறமைச் சான்றிதழ் விருதும் வழங்கப்பட்டது.  இவர் ‘சாதுரிய காக்கையார்’ என்ற சிறுவர் நாடகத்தில் காகம் பாத்திரத்திற்கு நடித்து தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார். அத்துடன் பாடகர்களாகவும், இசையமைப்பாளர்களாகவும், அரங்கு முகாமைத்துவத்திலும் பங்குபற்றிய ஏனைய மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் கிடைக்கப்பெற்றன.

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரிக்கு தேசிய ரீதியில் பல்வேறு விருதுகள் கிடைக்கப்பெற்ற ‘சாதுரிய காக்கையார்’ என்ற சிறுவர் நாடகத்திற்கு  வழிகாட்டல்களை  வழங்கிய அதிபர் அருட் சகோ.ரெஜினோல்ட், ஆடையலங்காரம் ஆசிரியர் திருமதி பிரதீபா முகுந்தன், மேடை அலங்கரிப்பு ஆசிரியர் செல்வராசா திருநாவுக்கரசு , ஆசிரியர் பிபோஜினி ஜெயரூபன் போன்றோரின் பங்களிப்பும் காத்திரமாக காணப்பட்டது. இவ் நாடகத்தில் சுமார் 28 மாணவர்கள் பங்குபற்றி இவ் வெற்றியைத் தனதாக்கிக் கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்