விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு

காணொளிக் குறிப்பு, விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு

விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு

ஃபெஞ்சல் புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்டத்தின் இருவேல்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு எந்தவித நிவாரண உதவிகளும் வழங்கவில்லை எனக் கூறி, திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று (டிச. 03) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் முன்னாள் எம்.பியுமான கவுதம சிகாமணி ஆகியோர் மீது சேறு வீசப்பட்டது

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அமைச்சர் பொன்முடி, அந்த இடத்திலிருந்து வெளியேறினார்.

இந்நிலையில், குறிப்பிட்ட கட்சியினர் உள்நோக்கத்துடன் இச்செயலில் ஈடுபட்டுள்ளதாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.