10
on Tuesday, December 03, 2024
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் நடத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடுதலின் போது நான்கு பேர் கேரளா கஞ்சாவுடனும் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடனும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 250 லீற்றர் கசிப்புடன் 15 பேருமாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி, புதிய காத்தான்குடி, ஆரையம்பதி, புதுக்குடியிருப்பு, கிரான்குளம், தாழங்குடா, கல்லடி, நாவற்குடா உட்பட இடங்களிலேயே குறித்த சுற்றிவலைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) ஆஜர் படுத்தப்பட உள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.