பயங்கரவாதத்தை முற்றாக புறக்கணிப்போம். எம்மோடு இணைந்து செயற்பட அனைவரும் முன்வாருங்கள் என பிரதமர் ஹரிணி அமரசூரிய அழைப்பு விடுத்தார்.
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனம் மீதான நாடாளுமன்ற விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் உரையாற்றுகையில்
நீண்டகாலமாக உருவாக்கப்பட்ட நிலையான கொள்கையொன்றை முன்வைத்துள்ளோம்.
பாரம்பரியமான தேர்ந்த அரசியல் ஆட்சியை மக்கள் நிராகரித்துள்ளனர், இந்தச் செய்தியை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
நீண்ட காலமாக, நமது நாட்டின் நிர்வாகம் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தது, இதன் காரணமாக அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது.
ஊழல் மிகுந்த அரசியல் கலாசாரத்தை மக்கள் முற்றாக நிராகரித்துள்ளனர்.
மக்கள் நிராகரிப்பது அரசியலை அல்ல, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் அரசியல் கலாசாரத்தையே நிராகரிக்கின்றார்கள்.
ஒருபோதும் காணாத பெண்களின் பிரதிநிதித்துவம் தற்போது பாராளுமன்றில் காணப்படுகிறது.
மேலும் எமது அமைச்சரவையில் உரிய துறையுடன் மிகவும் பொருத்தமானவர்களையே அப் பதவிகளுக்கு நியமித்துள்ளோம். தேசிய பட்டியல் விடயத்திலும் நாம் பல்வேறு கருத்துகளை உள்வாங்கி சரியானவர்களை நியமித்தோம்.
அத்தோடு பயங்கரவாதத்தை முற்றாக புறக்கணிப்போம். எம்மோடு இணைந்து செயற்பட அனைவரும் முன்வாருங்கள் எனவும் அழைப்பு விடுத்தார்.