பதவியில் இருந்து நீக்கப்பட்டார் நிஹால் தல்துவ ! புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நியமனம் !! on Tuesday, December 03, 2024
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றிய காலத்தில் ஊடகவியலாளர்கள் கேட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் தனக்குத் தெரியாது என பதிலளித்த பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ கடுமையாக விமர்சிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
பொலிஸ் ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளராகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளராகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) கே.பி. மனதுங்க நியமிக்கப்பட்டுள்ளானர்.
இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்காக சிரேஷ்ட பொலிஸ் அதியட்சகர் மானதுங்க கந்தளாய் பிரிவில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், எஸ்எஸ்பி ஐ.யு.கே. லொகுஹெட்டி, பரீட்சை பிரிவின் பணிப்பாளராக இருந்து விலகி கொழும்பு குற்றப்பிரிவின் பணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை, பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் உட்பட பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
5 பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் 35 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இது தவிர 7 பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் 7 உதவி பொலிஸ் அத்தியட்சர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளது.