இரண்டு யானை தந்த முத்துக்களுடன் நால்வர் கைது !

by wp_fhdn

இரண்டு யானை தந்த முத்துக்களுடன் நால்வர் கைது ! on Tuesday, December 03, 2024

திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பூநகர் பகுதியில் வைத்து, இரண்டு யானைத் தந்த முத்துக்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது அவர்கள் பயணித்த காரொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஈச்சிலம்பற்று பொலிஸ் நிலையத்தின் விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் யானை தந்த முத்துக்களுடன் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்டவர்கள் 69,42,37,35 வயதுகளையுடையவர்கள் எனவும் இவர்கள் தற்போது ஈச்சிலம்பற்று பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டள்ளதுடன் நாளை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்