19
on Tuesday, December 03, 2024
மழையுடனான காலநிலை காரணமாக நீர்மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
அதனால், மின் உற்பத்தி நிலையங்கள் அதிக கொள்ளளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதாக இலங்கை மின்சார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, நேற்று முன்தினம் (01) நாட்டின் மொத்த மின்சாரத் தேவையில் 62.2% நீர் மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் 35% முதல் 40% வரை மின்சாரக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க குறிப்பிட்டுள்ளார்.
You may like these posts