மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழ்ல்நுட்பக் கல்லூரியில் 2025ம் ஆண்டிற்க்கான புதிய கற்கை நெறிகள்

by adminDev2

on Monday, December 02, 2024

மட்டக்களப்பு தொழில்நுட்பக்‌ கல்லூரியில்‌ 2025ம்‌ ஆண்டுக்கான 30க்கு மேற்பட்ட NVQ மட்டம்‌ 3,456லான புதிய கற்கை நெறிகள்‌ ஆரம்பிப்பதற்கான விண்ணப்பங்கள்‌ கோரப்பட்டுள்ளன.

இக்கற்கை நெறிகளுக்கு க.பொ.த சாதாரணதரம்‌ கற்று சித்தியடையாத மாணவர்களும்‌ சித்தியடைந்த மாணவர்களும்‌, க.பொ.த உயர்தரம்‌ சித்தியடைந்த மாணவர்களும்‌, க.பொ.த உயர்தரம்‌ கற்ற மாணவர்களும்‌ விண்ணப்பிக்கலாம்‌.

* இக்கற்கை நெறியை பயிலும்‌ மாணவர்களுக்கு மாதாந்தம்‌ 4000/- ரூபா நிபுணதா சிசு சலிய புலமைப்பரிசில்‌ உதவித்தொகை வழங்கப்படும்‌.

* மானிய அடிப்படையிலான போக்குவரத்து சீசன்‌ ரிக்கட்‌ வசதி செய்து       தரப்படும்‌.

* சுயதொழில்‌ தொடங்குவதற்கு கடன்வசதி வங்கி மூலமாக செய்து தரப்படும்‌.

* உள்நாட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு வசதிகள்‌ செய்து தரப்படும்‌.

விண்ணப்ப படிவங்கள்‌ மற்றும்‌ கற்கை நெறி தொடர்பான விடயங்களை தொழில்நுட்பக்‌ கல்லூரியில்‌ பெற்றுக்கொள்ளலாம்‌.

https://ism.dtet.gov.lk/OnlineDTET/public/Application   இல்‌ இணையத்தளத்தின்‌ ஊடாகவும்‌ மாணவர்கள்‌ விண்ணப்பிக்க முடியும்‌.

விண்ணப்ப முடிவுத்திகதி 27.12.2024 (மேலதிக தகவல்களுக்கு 22.11.2024ம்‌ திகதி அரச வர்த்தமானியை பார்வையிடவும்‌),

தொடர்புடைய செய்திகள்