சென்னையில் தரையிறங்க தடுமாறிய விமானம் – சாதுர்யமாக கையாண்ட விமானி

காணொளிக் குறிப்பு, ஃபெஞ்சல் புயலால் தரையிறங்கத் தடுமாறிய விமானத்தை சாதுர்யமாக விமானி கையாண்ட வைரல் காணொளி

சென்னையில் தரையிறங்க தடுமாறிய விமானம் – சாதுர்யமாக கையாண்ட விமானி

சென்னையில் ஃபெஞ்சல் புயலால் தரையிறங்கத் தடுமாறிய விமானத்தை சாதுர்யமாக விமானி கையாண்டது சமூக ஊடகங்களில் கவனம் பெற்றுள்ளது.

ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி மற்றும் மாமல்லபுரம் இடையே நவம்பர் 30ம் தேதி இரவு கரையைக் கடந்தது.

புயலின் தாக்கமாக சென்னை, புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் பலத்தக் காற்றுடன் அதிகனமழை பெய்தது. இந்நிலையில் சீரற்ற வானிலைக் காரணமாக சென்னைக்கு வரும் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.ச்

புயம் கரையை கடந்த தினத்தன்று (நவம்பர் 30) மதியம் மும்பையிலிருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ பயணிகள் விமானம் ஒன்று பலத்தக் காற்றால் தரையிறங்க முடியாமல் தடுமாறியது.

பலத்த காற்று வீசி கொண்டிருந்த நிலையில் விமானி சாதுர்யமாக கையாண்டு விமானத்தை தரையிறக்கினார். இந்த காட்சிகள் வைரல் காணொளியானது.

அன்று என்ன நடந்தது? விமானி இந்த சூழலை கையாண்டது எப்படி?

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு