on Monday, December 02, 2024
கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட க பொ.த (உயர்தர) பரீட்சை நிலையங்களை தேசிய மக்கள் சக்தி அமைப்பின் தொண்டர்கள் சிரமதான மூலமாக துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அக்கரைப்பற்றிலுள்ள, அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி, அஸ்-சிராஜ் மகா வித்தியாலயம், இராமகிருஷ்ணா மத்திய கல்லூரி ஆகிய மூன்று மத்திய நிலையங்களில் உள்ள பரீட்சை நிலையங்களை துப்புரவு செய்யும் பணிகளை திகாமடுல்ல மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்ப்பினர் மஞ்சுள மீமன சுகத் ரத்னாயக்க சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார். தொண்டர்களோடு சிநேகபூர்வமான முறையில் உரையாடிய பாராளுமன்ற உறுப்பினரோடு, வேட்பாளர் மொஹிடீன் ரமீஸ், கிழக்கு மாகாண முன்பள்ளி பாடசாலை பணியகத்தின் தவிசாளர் எம்.ஏ. அமீர்தீன் மற்றும் கட்சியின் தொண்டர்களும் சென்றிருந்தனர். அக்கரைப்பற்று அஸ்-சிராஜ் மகா வித்தியாலயதிற்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினருக்கு ஆதரவாளர்கள் நினைவுப்பரிசு ஒன்றையும் வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.