அரசியலிலிருந்து இடைவேளையைப் பெற்றுக் கொள்ளவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு ! on Monday, December 02, 2024
தாம் அரசியலிலிருந்து இடைவேளையைப் பெற்றுக் கொள்ளவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மூன்றில் இரண்டு அறுதிப் பெரும்பான்மையை வழங்கி புதிய கொள்கைகளைக் கொண்ட அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு உரியத் தீர்வுகள் தங்களிடம் உள்ளதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
அந்த பணிகளை நிறைவேற்றுவதற்கு ஜனநாயக ரீதியில் இடமளிக்க வேண்டும் என்பது எமது பொறுப்பாகும்.
இந்நிலையில், எந்தவொரு அரசியல் நடவடிக்கைகளிலும் தாம் ஈடுபடப் போவதில்லை என முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நான் எந்தவொரு அரசியல் கட்சியிலும் அங்கம் வகிக்கவில்லை.
ஒரு கலாநிதி பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக நாட்டிலிருந்து வெளியேறவுள்ளேன்.
ஆகையால் அரசியலிலிருந்து தற்காலிக இடைவேளை ஒன்றைப் பெற்றுக் கொள்ளவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.