8
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவியின் விளக்கமறியல் நீடிப்பு ! on Monday, December 02, 2024
சட்டவிரோதமான முறையில் கார் ஒன்றினை பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவியை எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும் இன்று (02) நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மிரிஹான அம்குதெனிய பிரதேசத்தில் உள்ள முன்னாள் அமைச்சரின் மனைவிக்கு சொந்தமான மூன்று மாடி வீடொன்றில் இருந்து பதிவு செய்யப்படாத Lexus ரக கார் ஒன்றினை மிரிஹான பொலிஸார் அண்மையில் கண்டுபிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.