11
மாதாந்த எரிவாயு விலைத்திருத்தம் தொடர்பில் இன்று அறிவிப்பு ! on Monday, December 02, 2024
By Shana
No comments
மாதாந்த எரிவாயு விலைத்திருத்தம் இன்று (02) அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் எரிவாயு விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை.
இறுதியாக கடந்த ஒக்டோபர் மாதமே எரிவாயு விலைத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதற்கமைய 12.5 கி.கி எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 3,690 ஆக காணப்படுகின்றது.
அதேவேளை லாஃப்ஸ் நிறுவனமும் இன்று தமது எரிவாயு விலைத்திருத்தத்தை அறிவிக்கவுள்ளதாக அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
You may like these posts