15
பேக்கரி ஒன்றில் தீ விபத்து ! on Monday, December 02, 2024
கொழும்பு, கொஹுவலை பிரதேசத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானம் ஒன்றிற்கு அருகில் உள்ள பேக்கரி ஒன்றில் இன்று திங்கட்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டதாக கொஹுவலை பொலிஸார் தெரிவித்தனர்.
தெஹிவளை தீயணைப்புப் பிரிவினர் இணைந்து தீ பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்தின் போது எந்தவித உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்திற்கான காரணமோ அல்லது நஷ்டமோ கணக்கிடப்படவில்லை என்பதுடன்,
கொஹுவல பொலிஸாரும் தீயணைப்பு சேவை திணைக்களமும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.