புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் அமைச்சரவையின் தீர்மானம் !

by guasw2

புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் அமைச்சரவையின் தீர்மானம் ! on Monday, December 02, 2024

2024 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் இலவசப் மதிப்பெண் வழங்குவதற்கு அமைச்சர்கள் சபை பரிந்துரைத்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று (02) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இந்த வினாத்தாள் பரீட்சையை மீண்டும் நடத்துவது பொருத்தமற்றது என அமைச்சர்கள் சபை பரிந்துரைத்துள்ளதாகவும், இதனால் மாணவர்கள் பாதிக்கப்படலாம் எனவும் சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் வெளியானதாக கூறப்படும் மூன்று வினாக்களுக்கு முழு மதிப்பெண் வழங்க எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த தினம் முடிவடைந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் பகுதியில் மூன்று கேள்விகள் முன்னதாகவே வெளியிடப்பட்டதாக கூறப்படும் சம்பவம் காரணமாக பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மனுக்களை முழு உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் விசாரிக்குமாறு கோரி சட்டமா அதிபர் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாகவும் சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

மனு மீதான விசாரணையை டிசம்பர் 11 ஆம் திகதி நடத்தவும் இதன்போது உத்தரவிடப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்