சகல எம்.பிக்களினதும் ஓய்வூதியம் இரத்து !

by adminDev2

சகல எம்.பிக்களினதும் ஓய்வூதியம் இரத்து ! on Monday, December 02, 2024

மக்களுக்கு சேவை செய்யும் எம்.பிமாருக்கு சம்பளமே உரித்தான ஒன்றல்ல. ஆனால், ஓய்வூதியக் கொடுப்பனவு நிச்சயம் இரத்துச்செய்யப்படும் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் ஓய்வூதியக் கொடுப்பனவுகளை இரத்துச் செய்வதற்கான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவுத்துறை அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கான நடவடிக்கைகள் விரைவுப்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் சமரசிங்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் அநுராதபுரம் கிழக்குக்கான மக்கள் சந்திப்பு அலுவலக திறப்பு விழா அண்மையில் நடைபெற்றபோது, நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவோ அல்லது கலாநிதி பிரதமர் ஹரிணி அமரசூரியவோ எந்த ஒரு அரசாங்க இல்லத்தையும் உபயோகப்படுத்தவில்லை.

முன்னாள் அமைச்சர்கள் தங்களது உத்தியோகபூர்வ இல்லங்களை கையளித்துள்ளனர். எனினும், எமது அமைச்சர்கள் எவரும் இதுவரை வீடுகளைக் கோரவில்லை.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறும் தினங்களில், கொழும்பில் தங்குவதற்காக, மாதிவெலயிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வீட்டுத் தொகுதியில் வீடு வழங்கப்படும்.

அமைச்சர் என்ற வகையில் எனக்கும் மூன்று V8 வாகனங்கள் கிடைக்கும். எனினும் எந்தவொரு வாகனத்தையும் நான் உபயோகிப்பதில்லை.

சம்பளம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உரித்தானதல்ல. எவ்வாறெனினும் ஓய்வூதியக் கொடுப்பனவை கண்டிப்பாக இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேவேளை, நுகர்வோரைப் பாதிக்காத வகையிலான வர்த்தக கலாசாரம் நாட்டில் உருவாக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்