ஊத்தங்கரை: வாகனங்களை சரித்த வெள்ளம்; விடாத கனமழையால் உடைந்த ஏரி
ஊத்தங்கரை: வாகனங்களை சரித்த வெள்ளம்; விடாத கனமழையால் உடைந்த ஏரி
கனமழையால் கிருஷ்ணகிரியில் உள்ள பரசனேரியில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராவல்ஸ் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன.
ஃபெஞ்சல் புயல் தாக்கத்தின் காரணமாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கடந்த 24 மணிநேரத்தில் 50 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி நகரை பொறுத்தவரையில் சுங்கச்சாவடி, சேலம் மேம்பாலம், திருவண்ணாமலை மேம்பாலம், பழைய பேருந்து நிலையம், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, கணபதிநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகள் முழுவதும் மழை நீர் தேங்கி கடல் போல் காட்சி அளிக்கிறது.
கிருஷ்ணகிரி பழையபேட்டை, நேதாஜி சாலை ஆகிய பகுதிகளில் மழைநீர் கழிவுநீருடன் கலந்து வீடுகளுக்குள் புகுந்துள்ளது.
கிருஷ்ணகிரி நகர் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில், மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் தனி குழுக்களாக பிரிந்து வெள்ள நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு