on Monday, December 02, 2024
அம்பாறை மாவட்டத்தில் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்ததினால் நாற்பத்தி 6 ஆயிரத்து 766 குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 916 பேர் பாதிப்டைந்துள்ளதாக அம்பாறை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் சாமர ஜெயதிலக கடந்த 27 ஆம் திகதி இறுதியாக அனர்த்தம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக குளிரான காலநிலை நிலவுவதால் சிறுவர்கள் மற்றும் வயோதிபர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் கால் நடை உரிமையாளர்களும் கால நிலை தொடர்பில் கவனமாக செயற்பட வேண்டும் என அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் முகமது அப்துல் காதர் முகமது ரியாஸ் தெரிவித்தார்.
அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் விநாயகபுரம், காரைதீவு, சாய்ந்தமருது பிரதேசத்தில் காணப்படும் மீனவர்களின் வாழ்வாதாரம் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதடன், திருக்கோவில், அக்கரைப்பற்று, ஒலுவில் , நிந்தவூர், ஆலையடிவேம்பு, பொத்துவில் போன்ற பிரதேசங்களில் காணப்படும் வயல் நிலங்களும் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.