13
ஆஹா ஒகோ என கொண்டுவரப்பட்ட அனுர அரசு தள்ளாடத்தொடங்கியுள்ளது.இலங்கை முழுவதும் மீண்டும் வரிசை யுகம் தோன்றுமாவென்ற அச்சம் மூண்டுள்ளது.
இலங்கை முழுவதும் காஸ் சிலிண்டர்களிற்கு தட்டுப்பாடு மூண்டுள்ளது. கடந்த ஒரு மாதகாலமாக காஸ் சந்தையில் இல்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன.மட்டுப்படுத்தப்பட்ட கையிருப்புடன் வர்த்தக நிலையங்கள் தமக்கு நெருக்கமானவர்களிற்கு சிலிண்டர்களை விற்பனை செய்துள்ளனர்.
குறிப்பாக வடக்கில் தற்போது காஸ் போதிய கையிருப்பு இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தில் உள்ள காஸ் விற்பனை நிலையங்களில் மக்கள் காஸ் சிலிண்டர்களை கொள்வனவு செய்ய இன்று அலைந்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.