சீரற்ற காலநிலையினால் மட்டக்களப்பு இறால் பண்ணையாளர்கள் கடுமையான பாதிப்பு !

by guasw2

சீரற்ற காலநிலையினால் மட்டக்களப்பு இறால் பண்ணையாளர்கள் கடுமையான பாதிப்பு ! on Sunday, December 01, 2024

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் இறால் பண்ணையாளர்கள் கடுமையான பாதிப்பு அடைந்துள்ளனர்  எதிர்கொண்டுள்ளனர் தங்களின் இறால் பண்ணை முழுவதும் வெள்ள நீர்  நிறைந்த மையினால் வளர்க்கப்பட்ட இறால்கள் அனைத்தும் நீருடன் அடித்து சென்றமையால் பல லட்சம் ரூபாய்கள்  நஷ்டம் அடைந்துள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

மண்முனை மேற்கு பிரதேச செயலக  பிரிவிற்குட்பட்ட கரையாக்கன்தீவு கிராமத்தில் சுமார் 77 ஏக்கரில் 19 பண்ணையாளர்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வந்தனர் வங்கி கடன்கள் மூலமும் தங்கள் நகைகளை அடமானம் வைத்து இத்தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும் இறால் தீவனங்கள் கூட நீரால் அடித்து சென்றதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.

பாதிப் தொடர்பில் உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர் இந்த  இறால் பண்ணையாளர்கள்.

இந்த நட்டத்தினை தங்களால் தாங்க முடியாத நிலையில் உள்ளமையினால் அழிவடைந்த இறால் பண்ணையாளர்களுக்கு அரசாங்கம் நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என் பண்ணையாளர்கள் அரசிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர். தங்களின் பண்ணையில் வளர்க்கப்படும் இறால்கள் இன்னும் சில வாரங்களில் பிடிப்பதற்காக திட்டமிட்ட நிலையில் இவ்வாறு அனர்த்தம் நிகழ்ந்து ஒட்டுமொத்தமாக நீரில் அடித்து செல்லப்பட்ட மை கவலை அளிப்பதாக கருத்து வெளியிட்டார்.

இது தொடர்பில் அரசாங்கம் உடனடியாக எங்களின் நட்டத்திற்கு மதிப்பீட்டினை செய்து எங்களிடைய ஜீவனோ பாயம் செய்து வருகின்ற தொழிலை காப்பாற்றி அடுத்த முறை இறால் வளர்ப்பிற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அனைத்து பண்ணையாளர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்