மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழப்பு !

by smngrx01

மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழப்பு ! on Sunday, December 01, 2024

கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெதமுல்ல தோட்டத்தில் (30) சனிக்கிழமை இரவு மின்சாரம் தாக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த பகுதியில் மரக்கறி தோட்டத்தை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காகப் பாதுகாப்பு வேலியில் இணைக்கப்பட்ட மின்சார இணைப்பிலிருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் அதே தோட்டத்தில் குரங்கு விரட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் எனவும் வழக்கம் போல் விவசாய காணிக்குத் தொழிலுக்கு செல்லும்போது வழுக்கி மின்சார வேலியில் விழுந்து உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர் .

இந்த சம்பவத்தில் வெதமுல்ல தோட்டத்தைச் சேர்ந்த 67 வயதுடைய தங்கவேல் கிருஷ்ணராஜ் என்பவரே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சடலம் மீட்கப்பட்டு சடலத்தை பார்வையிட்ட நீதவான் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனைக்குட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸாருடன் நுவரெலியா தடயவியல் பொலிஸார் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்