புதிய மீன்பிடிஅமைச்சரும் சலாம் போடுகின்றார்

by smngrx01

இந்திய மீனவர்களது அத்துமீறலை கட்டுப்படுத்தப்போவதாக தனித்து கம்பு சுததி வந்திருந்த நிலையில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

குறித்த சந்திப்பானது எதிர்வரும் புதன்கிழமை(04) கொழும்பில் நடைபெறவுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது  இலங்கை – இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரியவருகின்றது.

குறிப்பாக, இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறல்களில் ஈடுபடுவதன் காரணமாக தொடர்ச்சியான கைதுகள் நடைபெற்று வருகின்றன.

அத்துடன், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசும் அத்துமீறும் இந்திய கடற்றொழிலாளர்களைக் கைது செய்யுமாறும், தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்துகின்றபோது அவற்றைக் கைப்பற்றுமாறும் கடற்படைக்குக் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இவ்வாறான பின்னணியிலேயே இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரைச் சந்திக்கவுள்ளார்.

மேலும், கடற்றொழில் அமைச்சராக சந்திரசேகர் பதவியை ஏற்றுக்கொண்டதன் பின்னர் இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா அவரைச் சந்திக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்