பாலஸ்தீன மக்களின் துயரங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை – ஜனாதிபதி !

by admin

பாலஸ்தீன மக்களின் துயரங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை – ஜனாதிபதி ! on Sunday, December 01, 2024

பாலஸ்தீன மக்களின் துயரங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன மக்களிற்கான ஐக்கிய நாடுகளின் ஆதரவு தினத்தை குறிக்கும் விதத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன பகுதிகளிலும் மேற்கு ஆசியாவிலும் ஒரு வருடத்திற்கு மேலாக நீடித்துவரும் பொதுமக்களின் உயிரிழப்புகளும், தொடரும் அழிவுகளும் சகித்துக்கொள்ள முடியாதவை என அவர் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன மக்களிற்கான இலங்கையின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள ஜனாதிபதி, பல சர்வதேச மன்றங்களில் இலங்கை காசாவின் மனிதாபிமான நிலை குறித்து ஆழ்ந்த கரிசனையை வெளியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனியர்களிற்கான ஐ.நாவின் நிவாரண முகவர் அமைப்பிற்கு எதிரான அச்சுறுத்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி,

அகதிகளின் வாழ்வை தாங்கிப்பிடித்த மனிதாபிமான சேவை வீழ்ச்சியடையும் நிலையில் உள்ளமை ஏமாற்றமளிக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்