காட்டின் எல்லையில் வைத்து குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது.
வவுனியா ஓமந்தை பரிசங்குளம் பகுதியில் வானில் வந்தவர்களால் இந்த வாள் வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் ஓமந்தை நாவற்குளம் பகுதியை சேர்ந்த 46 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான செல்வநிரோஜன் உயிரிழந்துள்ளார்.
வானில் வந்தவர்கள், ஆட்கள் நடமாட்டம் குறைந்த இடத்தில் இந்த வாள்வெட்டை மேற்கொண்டுள்ளனர். கழுத்து, கை, கால்களில் வெட்டுக்கள் வீழைந்த இவரை முச்சக்கர வண்டியில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியசாலையில் கூறப்பட்டுள்ளது.
நெல் வெட்டும் இயந்திரம் வைத்து தொழில் செய்து வரும் இவர், மாடு, எருமை பட்டியொன்றையும் வைத்துள்ளார்.
ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
காணி பிணக்கினால் இந்த கொலை நடந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.