சட்ட விரோத சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது !

by smngrx01

சட்ட விரோத சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது ! on Sunday, December 01, 2024

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் நேற்று சனிக்கிழமை (30) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குருநாகல் முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெல்லவ பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து 1400 சட்டவிரோத சிகரெட்டுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து முச்சக்கரவண்டியுடன் சந்தேக நபரை வெல்லவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்