16
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தினால் குறுங்கால பாடநெறிகளுக்காக விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன. on Sunday, December 01, 2024
(சித்தா)
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தினால் கல்வி ஆய்வு முறைமை, பாடசாலை முகாமைத்துவம் போன்றவற்றிற்கு குறுங்கால பாடநெறிகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றுள்ளவர்கள் கல்வி ஆய்வு முறைமை குறுங்கால பாடநெறிக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றவர்களாவர். தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகள் மூலம் நடைபெறும் 3 மாத காலப் பகுதியைக் கொண்டதாக இது அமைந்துள்ளது.
இலங்கை அதிபர் சேவை, இலங்கை கல்வி நிருவாக சேவை, கல்வித் துறையில் ஆர்வமுடையவரகள் பாடசாலை முகாமைத்துவ குறுங்கால பாடநெறிக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றவர்களாவர்.
இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.