காட்டு யானையின் தாக்குதலில் கடற்படை சிப்பாய் மரணம்!

by wp_shnn

வவுனியாவில் காட்டு யானையின் தாக்குதலில் சிக்கி கடற்படை லெப்டினன்ட் தர அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பூனாவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கடற்படை அதிகாரி பணி நிமித்தமாக கொழும்புக்கு சென்று விட்டு மீண்டும் முகாமிற்கு திரும்பிய வாகனத்தில் இருந்து இறங்கி முகாமிற்கு சென்று கொண்டிருந்த போது யானை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யானை தாக்கியதில் பலத்த காயமடைந்த அவரை, கடற்படையினர் மற்றும் உள்ளூர் மக்களும் இணைந்து வவுனியா பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் பூனாவ கடற்படை முகாமில் கடமையாற்றிய மத்தலான, நிட்டம்புவவில் வசிக்கும் கடற்படை வீரரான லெப்டினன்ட் தர அதிகாரியே யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணைகளின் பின்னர் பிரேத பரிசோதனை வவுனியா பொது வைத்தியசாலையில் நடத்தப்படவுள்ளது.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பூனாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்